/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்
/
பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டும்: கலெக்டர்
ADDED : ஜூன் 08, 2025 10:41 PM
கோவை; கோவையில் பசுமை பரப்பு அதிகரித்து, இயற்கையும் பசுமையும் செழிக்க வேண்டும். அதற்காக அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள் என்று, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூலூர் கிட்டாம்பாளையம் அண்ணா தொழிற்பேட்டை வளாகத்தில், 15,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. பொள்ளாச்சி சாலையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் என்று, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.