/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை தொண்டாமுத்தூர் இயக்கத்தில் 2 லட்சம் மரக்கன்று நட திட்டம்
/
பசுமை தொண்டாமுத்தூர் இயக்கத்தில் 2 லட்சம் மரக்கன்று நட திட்டம்
பசுமை தொண்டாமுத்தூர் இயக்கத்தில் 2 லட்சம் மரக்கன்று நட திட்டம்
பசுமை தொண்டாமுத்தூர் இயக்கத்தில் 2 லட்சம் மரக்கன்று நட திட்டம்
ADDED : ஜூலை 23, 2025 09:37 PM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பசுமை தொண்டாமுத்தூர் இயக்கத்தின் சார்பில், இந்தாண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்குதல், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு புத்துயிர் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் துவங்கப்பட்டது.
காவேரி கூக்குரல் இயக்கத்துடன், தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப், கோவை கட்டட கலைஞர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த இயக்கங்கள் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில், இந்த ஆண்டில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா, தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவில், காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள், தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.