தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர் சிக்கனத்துடன், வறட்சியை சமாளிக்க பசுமைக்குடில்! தென்னை நார் துகள் பயன்படுத்த வலியுறுத்தல்

நீர் சிக்கனத்துடன், வறட்சியை சமாளிக்க பசுமைக்குடில்! தென்னை நார் துகள் பயன்படுத்த வலியுறுத்தல்

நீர் சிக்கனத்துடன், வறட்சியை சமாளிக்க பசுமைக்குடில்! தென்னை நார் துகள் பயன்படுத்த வலியுறுத்தல்


UPDATED : செப் 29, 2026 11:10 PM

ADDED : செப் 29, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 11:10 PM ADDED : செப் 29, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: தென்னை நார் துகள் பயன்படுத்தி காய்கறிகளை உற்பத்தி செய்யும், பசுமைக்குடில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என, சர்வதேச தென்னை நார் சங்க தலைவர் கவுதமன் தெரிவித்தார்.

இந்தியாவில், 14 மாநிலங்களில் உள்ள, 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், பருவமழை பொய்த்ததால், வறட்சியான சூழலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, காய்கறி உற்பத்தியை அதிகரிக்க கூடிய தென்னை நார் துகள்களை கொண்டு பசுமை குடில் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

சர்வதேச தென்னை நார் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது:

உலகம் முழுவதும் கடந்த, 100 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம், 20 முதல், 260 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, 730 மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நீர்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த, 40 ஆண்டுகளில், நீரின் கடின தன்மை பல்வேறு காரணங்களினால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும், 46 சதவீதம் விவசாயிகள், கடந்த இரண்டு ஆண்டகளில், மழை பற்றாக்குறை, வறட்சி, மிக அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தனி மனிதரின் காய்கறி வாங்கும் திறன் வாரத்துக்கு, 1,000 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை செலவாகிறது.

வளர்ந்த நாடுகளான நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சீனா போன்ற நாடுகளில், காய்கறி உற்பத்தி, 12 - 30 சதவீதம் செய்யப்படுகிறது. இதற்காக இந்தியாவில் இருந்து, 16 லட்சம் மெட்ரிக் கடன் தென்னை நார் துகள் (கோகோ பித்) செல்கிறது. இதை பயன்படுத்தி சீனாவில், 3.50 லட்சம் ெஹக்டரில், கோகோ பித் க்ரோ பேக் பயன்படுத்தி, பசுமை குடில் அமைத்து காய்கறி உற்பத்தி செய்கின்றனர்.

காய்கறி உற்பத்தி செய்து உள்ளூர், வெளிநாடுகளுக்கும் சீனாவில் இருந்து அனுப்பப்படுகின்றனர். உற்பத்தியில், 50 - 70 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. உரச்செலவு, பூச்சி மருந்து உபயோகம், ஆட்கள் செலவு குறைக்க முடியும்.

ஆஸ்திரேலியாவில், இந்தியாவில் இருந்து செல்லும் கோகோ பித் க்ரோ பேக் பயன்படுத்தி இஞ்சி சாகுபடி செய்துள்ளனர். வழக்கமான முறையில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால், 5 - 8 டன் இஞ்சி உற்பத்தி செய்யலாம்; க்ரோ பேக் பயன்படுத்தி, 60 -90 டன் வரை உற்பத்தி கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில், 35 ஆயிரம் ெஹக்டர் மட்டுமே பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் சூழலில், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடுகின்றனர். இச்சூழலில், தமிழகத்திலும், கோகோ பித் க்ரோ பேக் பயன்படுத்தி பசுமை குடில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மானிய உதவிகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us