/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் 'பசுமையும் பாரம்பரியமும்' கலைத்திருவிழா
/
பள்ளியில் 'பசுமையும் பாரம்பரியமும்' கலைத்திருவிழா
ADDED : ஆக 19, 2025 09:35 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டின் கல்வி சாரா செயல்பாடுகள் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளாக நடத்தப்பட்டன.
பிரிவு ஒன்றில், 1 மற்றும், 2ம் வகுப்புகள், பிரிவு,2ல், 3,4,5 வகுப்புகள், பிரிவு,3ல், 6,7,8ம் வகுப்புகள் என பிரிக்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
ஒன்றாம் மற்றம் இரண்டாம் வகுப்புகளுக்கு ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மை, ஆங்கிலப் பாடல்கள் என ஆறு போட்டிகளும்,3,4,5 வகுப்புகளுக்கு பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், களிமண் பொம்மைகள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம் உட்பட 12 போட்டிகள் நடந்தது.
மேலும், 6,7,8 வகுப்புகளுக்கு ஓவியம், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், செவ்வியல் இசை, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப்பாடல், கிராமிய நடனம், பரத நாட்டியம், தனி நடிப்பு, பாவனை (மைமிங்), பலகுரல் பேச்சு உட்பட 14 போட்டிகளும் நடந்தன.
பள்ளி அளவிலான போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர்கள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.மேலும், முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள் மட்டும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.
'பசுமையும் பாரம்பரியமும்' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றன.தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர்.