/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமைக்குடிலில் சாகுபடி முறை வேளாண் மாணவியருக்கு விளக்கம்
/
பசுமைக்குடிலில் சாகுபடி முறை வேளாண் மாணவியருக்கு விளக்கம்
பசுமைக்குடிலில் சாகுபடி முறை வேளாண் மாணவியருக்கு விளக்கம்
பசுமைக்குடிலில் சாகுபடி முறை வேளாண் மாணவியருக்கு விளக்கம்
ADDED : ஏப் 23, 2025 10:35 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, வேளாண் மாணவியர், பசுமைக்குடிலில் சாகுபடி குறித்து பார்வையிட்டனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை இளங்கலை மாணவியர் வேளாண் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், விவசாயிகளை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பொன்னாயூரில் உள்ள பசுமை குடிலுக்கு சென்று வேளாண் மாணவியர் பார்வையிட்டனர். வேளாண் பட்டதாரி விஜய், 4,400 சதுர மீட்டரில் பசுமைக்குடில் கட்டமைத்து கொத்தமல்லி, வெள்ளரி சாகுபடி செய்கிறார். பசுமைக்குடில் அமைக்க, 40 சதவீதம் மானியம் வழங்கப்பட்டதாகவும், மேலும், அரை ஏக்கருக்கு பசுமைக்குடிலை விரிவு செய்து மலர்கள் சாகுபடி செய்வதாகவும் விளக்கமளித்தார். இதை தொடர்ந்து மாணவியர், தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி உபயோகிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆண்டுக்கு, ஒரு மரத்துக்கு, 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும், 200 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ், இவற்றை தொழுஉரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து வேர் பகுதியில் இட வேண்டும்.குறிப்பாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் இதர நுண்ணுயிர்களை ரசாயன உரங்களுடன் கலக்க கூடாது, என, விளக்கமளிக்கப்பட்டது.

