/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்
/
மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 11:12 PM
கோவை; கோவை, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரது தலைமையில், பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்துவது வழக்கம்.
நிர்வாக காரணங்களால், இரு வாரங்களாக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. மனு கொடுக்க வருவோர் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். சிலர், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனுக்களை இட்டுச் சென்றனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற சந்தேகம் மக்களிடம் எழுகிறது.
இதையடுத்து, இன்று (ஏப்., 15) குறைகேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை, 11:00 மணிக்குத் துவங்கும்; தங்கள் பகுதி குறைகளையோ அல்லது தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளையோ எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்து தீர்வு காணலாம்.

