ADDED : பிப் 07, 2024 11:07 PM
அ நிறம் | அளவு
உடுமலை : மாவட்ட அளவிலான குறை கேட்பு கூட்டம், வாரம் தோறும் திங்கட்கிழமை நடக்கிறது. இதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக இக்கூட்டத்தில் வழங்குவது வழக்கம்.
அதன்படி, திருப்பூர் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மொத்தம், 418 மனுக்கள் பெறப்பட்டன. குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகளை களைய வேண்டும், உட்பட பல்வேறு குறைகளை தீர்க்கக்கோரி மக்கள் வலியுறுத்தினர்.
