/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெருக்கடியில் 'கிரில் பேப்ரிகேஷன்' தொழில் நீண்டகாலமாக நிறைவேறாத கோரிக்கைகள்
/
நெருக்கடியில் 'கிரில் பேப்ரிகேஷன்' தொழில் நீண்டகாலமாக நிறைவேறாத கோரிக்கைகள்
நெருக்கடியில் 'கிரில் பேப்ரிகேஷன்' தொழில் நீண்டகாலமாக நிறைவேறாத கோரிக்கைகள்
நெருக்கடியில் 'கிரில் பேப்ரிகேஷன்' தொழில் நீண்டகாலமாக நிறைவேறாத கோரிக்கைகள்
ADDED : மார் 20, 2024 12:39 AM

கோவை;கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 'கிரில் பேப்ரிகேசன்' தொழிலை துாக்கிவிடும் நீண்டகால கோரிக்கைளை, அரசு கண்டுகொள்ளாததால் தொழில் நசிந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், 4,500க்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்களும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.
கொரோனா சமயத்தில் பெரும் நெருக்கடிகளை சந்தித்த தொழில் துறையில் 'கிரில் பேப்ரிகேசன்' எனும் கிரில் தயாரிப்பு தொழிலும் ஒன்று.
சிரமங்களுக்கு மத்தியில், தொழில் மீண்டுவரும் சமயத்தில் மின் கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறியது.
இலவச மின்சாரம், தொழிற்பேட்டை போன்ற கோரிக்கைளை, தமிழக அரசிடம் கிரில் தயாரிப்பாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் ரவி கூறியதாவது:
கிரில் தொழில் தற்போது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 4,500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இருந்த கோவையில், தற்போது 2,500 மட்டுமே செயல்படுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்து வருகிறோம்; இதுவரை ஒன்றுகூட நிறைவேறவில்லை.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி கூடங்கள் போல், நாங்களும் ஜி.எஸ்.டி., வசூலிக்க முடியாமல் கூலிக்கு செய்து வருகிறோம்.
எனவே, விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு போல் எங்களுக்கும் குறைந்தபட்சம், 500 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், அதற்கு மேல் சலுகை கட்டணத்திலும் வழங்க வேண்டும்.
கிரில் பேப்ரிகேசன் தொழிலுக்கென்று தனி தொழில் பேட்டை, தனி நலவாரியம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், வெல்டர், 'சீட் மெட்டல் ஒர்க்கர்' படிப்பு பயிலும் மாணவர்களை, 'அப்ரன்டீஸ்' ஆக அனுப்ப, ஆவண செய்தால் எங்கள் தொழில் தப்பும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

