/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
கிரில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 29, 2025 11:09 PM
கோவை; கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தின், ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் திருமலை ரவி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிக் கூடங்களுக்கு அளிப்பது போன்று, கிரில் தொழிலுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், 12 கிலோவாட்டுக்கு கீழ் பயன்படுத்தும் தொழில்நிறுவனங்களுக்கு, 3ஏ1 கட்டண விகிதத்துக்கு தானியங்கியாக மாற்றித் தர வேண்டும்.
இதற்கான முறையான அரசாணை வெளியிடப்பட வேண்டும். கிரில் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சமூக சேவகர்கள், விளையாட்டு வீரர்கள், சிறந்த தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக, 30 இரும்புக் கம்பங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
பொதுச்செயலாளர் பெரியசாமி, கிரில் சங்க தலைவர் ராஜதுரை, 'எம்சியா' தலைவர் ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

