/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலைப் பொருள் விற்ற மளிகை வியாபாரிக்கு சிறை
/
புகையிலைப் பொருள் விற்ற மளிகை வியாபாரிக்கு சிறை
ADDED : ஜூலை 16, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மளிகைக்கடையில் புகையிலைப் பொருட்களை, மறைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை ராமநாதபுரம் போலீசார், மருதூர் சுப்பிரமணியர் கோவில் வீதியில் உள்ள மளிகை கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்காவை, பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது.
அங்கிருந்த, 9 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். குட்கா விற்பனையில் ஈடுபட்ட மளிகைக்கடை உரிமையாளர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், 46 என்பவரை சிறையில் அடைத்தனர்.