/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டி முடித்தும் பலனில்லாத நிலமட்டத் தொட்டி! விழலுக்கு இறைத்த நீராக ரூ.13 லட்சம்

ADDED : டிச 10, 2024 11:43 PM

கோவில்பாளையம்; அக்ரஹார சாமக்குளத்தில், 13 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நிலமட்ட தொட்டி, ஐந்து ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த அக்ரஹார சாமக்குளத்தில் 5000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு தட்டுப்பாடு இல்லாமல், வீடுகளுக்கு குடிநீர் வழங்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், கடந்த 2018ம் ஆண்டு எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார்.
இதையடுத்து இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2019ல் கட்டி முடிக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் நடைபெறும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை இந்த தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'அரசு நிதி 13 லட்சம் ரூபாய், ஐந்து ஆண்டுகளாக வீணாக முடங்கிக் கிடக்கிறது. தொட்டி பயன்படுத்தப்படாமல் தற்போது பிளவுபட்டு உள்ளது. வீடுகளுக்கு, பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. தரைமட்ட தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கொண்டு வர முடியாவிட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.