/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் இன்று நிலக்கடலை ஏலம்
/
அன்னுாரில் இன்று நிலக்கடலை ஏலம்
ADDED : அக் 06, 2025 11:35 PM
அன்னுார்;அன்னுாரில் நிலக்கட லை ஏல விற்பனை இன்று நடக்கிறது.
அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (7ம் தேதி) முதல் நிலக்கடலை ஏல விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் நிலக்கடலையை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து எந்த கமிஷனும் தராமல் விற்பனை செய்யலாம். வியாபாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடோன்களில் இருப்பு வைத்தும் விற்கலாம். ஏற்கனவே புதன் தோறும், தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிலக்கடலை விவசாயிகள் விற்பனைக்கு வரும்போது தங்கள் வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் நகல் கொண்டு வர வேண்டும்.
மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விற்று பயன்பெறலாம்,' என, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.