/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழு வீடுகள் மறுசீரமைப்பு; 'கிரெடாய்' கோவை பங்களிப்பு
/
குழு வீடுகள் மறுசீரமைப்பு; 'கிரெடாய்' கோவை பங்களிப்பு
குழு வீடுகள் மறுசீரமைப்பு; 'கிரெடாய்' கோவை பங்களிப்பு
குழு வீடுகள் மறுசீரமைப்பு; 'கிரெடாய்' கோவை பங்களிப்பு
ADDED : செப் 04, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழக முதல்வரின் குழு வீடுகள் மறு சீரமைப்பு திட்டத்துக்கு, 'கிரெடாய்' கோவை கிளையைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் சார்பாக, ரூ.45 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, 'கிரெடாய்' உறுப்பினர்கள், கலெக்டர் பவன்குமாரிடம் வழங்கினர்.
'300 சதுர அடி பரப்பில், சோலாரில் இயங்கும் விளக்குகள் மற்றும் மழை நீர் சேகரிப்பு வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டும் முதல்வரின் இத்திட்டத்துக்கு 'கிரெடாய்' அமைப்பைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் வாயிலாக பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என, 'கிரெடாய்' கோவை கிளை தெரிவித்துள்ளது. இதனால், 25 குடும்பங்கள் பயனடையும்.