/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜாப் ஆர்டர் தொழிலுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கணும்; தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

ADDED : டிச 28, 2024 12:30 AM
கோவை; ஜாப் ஆர்டர் செய்யும் குறு, சிறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,விகிதத்தைக் குறைக்க வேண்டும் என, தொழில் அமைப்புகள் சார்பில், ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோவை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில்ல முதன்மை கமிஷனர் தினேஷ் புருசோத்தமராவ் பங்கர்கரை, கொடிசியா, சி.ஐ.ஏ., உள்ளிட்ட தொழில் அமைப்பினர் சந்தித்தனர். அப்போது, காம்போசிட் வரி செலுத்துபவர்களுக்கு, வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., விதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்றதற்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது.
55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மருத்துவக் காப்பீட்டுக்கான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், பேக் செய்த பாப்கார்னுக்கு வரி விதித்தால், குடிசைத்தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் எனவே, அதை வரியில்லாப் பொருளாக அனுமதிக்க வேண்டும், ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, தொழில் அமைப்பினர் முன்வைத்தனர்.
கொடிசியா உதவி இணைச் செயலாளர் சவுந்தரராஜன், சி.ஐ.ஏ., தலைவர் தேவகுமார், கொடிசியா செயலாளர் ஜெயகுமார், டான்மிடா தலைவர் சங்கரநாராயணன், கோன்சியா நிர்வாகி மணி, எலெக்டிரிக் அசோசியேஷன் நிர்வாகி சுரேந்திரன் உட்பட, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.