/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓபன் பிரிவு பால் பேட்மிண்டன் போட்டியில் ஜி.டி.அணி வெற்றி
/
ஓபன் பிரிவு பால் பேட்மிண்டன் போட்டியில் ஜி.டி.அணி வெற்றி
ஓபன் பிரிவு பால் பேட்மிண்டன் போட்டியில் ஜி.டி.அணி வெற்றி
ஓபன் பிரிவு பால் பேட்மிண்டன் போட்டியில் ஜி.டி.அணி வெற்றி
ADDED : ஆக 11, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், 28வது மாவட்ட அளவிலான பால் பேட்மிண்டன் போட்டி நடந்தது.
'ஓபன்' பிரிவு போட்டியில், 14 கிளப் அணிகள் பங்கேற்றன. போட்டிகளை கல்லுாரி முதல்வர் ராஜேஷ்வரி துவக்கிவைத்தார். பல்வேறு சுற்றுகளை அடுத்து, நடந்த இறுதிப்போட்டியில் போத்தனுார் ஜி.டி. வெயிலர் கிளப் அணியும், ஜி.வி. ரெசிடென்ஸி அணியும் மோதின. இதில், ஜி.டி. அணி, 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பரிசு வென்றவர்களுக்கு, 'மகேந்திரா பம்ப்ஸ் டிராபி-2025' வழங்கப்பட்டது.