/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டல்
/
ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டல்
ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டல்
ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டல்
ADDED : பிப் 12, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;'அனைவருக்கும் ஐ.ஐ. டி., மெட்ராஸ்' திட்டம் குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், விருப்பத்தின் பேரில் பங்கேற்ற, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், 1,751 பேருக்கு மூன்று அமர்வுகளாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், ஐ.ஐ.டி., பி.எஸ்., இளங்கலை அறிவியல் படிப்பு குறித்தும், சேர்க்கை முறை உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தார்.
மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கல்வி அலுவலர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.