/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிகாட்டி மைல் கற்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
/
வழிகாட்டி மைல் கற்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
வழிகாட்டி மைல் கற்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
வழிகாட்டி மைல் கற்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜன 01, 2025 07:51 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல இடங்களில், ரோட்டோரத்தில் நடப்பட்டுள்ள வழிகாட்டி மைல் கற்கள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், பல இடங்களில் ரோட்டோரம் உள்ள வழிகாட்டி மைல் கல்லில், ஊர் பெயர் மற்றும் கிலோ மீட்டர் துாரம் அழிந்து இருந்தது. மேலும், சில இடங்களில் இந்த வழிகாட்டிகள் கேட்பாரற்று புதர் சூழ்ந்த நிலையில் உள்ளது.
இதனால், புதிதாக கிணத்துக்கடவு பகுதிக்கு வாகனங்களில் வரும் மக்கள் பலர், இடம் மற்றும் கிலோமீட்டர் துாரம் தெரியாமல் இருந்தனர்.
மேலும், சிலர் பாதி அழிந்த நிலையில் உள்ள வழிகாட்டி கல்லை கவனித்து, செல்ல நினைக்கும் இடத்தை தவிர்த்து, வேறு இடத்துக்கு பயணிக்கும் சூழல் இருந்தது.
தற்போது 'தினமலர்' செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை துறை சார்பில், மைல் கற்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் நிம்மதி அடைந்துள்ளனர்.

