/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கு சாட்சி நபருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
/
கொலை வழக்கு சாட்சி நபருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கு சாட்சி நபருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கு சாட்சி நபருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ADDED : டிச 03, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையைச் சேர்ந்தவர் நேரு தாஸ், 38. இவர் தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை இயக்க தலைவராக இருந்து வருகிறார். இவரது நண்பர் பாரூக் என்பவர் கடந்த, 2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, கோவை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில், நேரு தாஸ் சாட்சியமாக இருந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், நேருதாசுக்கு மிரட்டல் வந்ததாக, அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நேரு தாசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு, துப்பாக்கி உடன் போலீசார் சென்று வருகின்றனர்.