/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் 18ல் குண்டம் திருவிழா துவக்கம்
/
மாசாணியம்மன் கோவிலில் 18ல் குண்டம் திருவிழா துவக்கம்
மாசாணியம்மன் கோவிலில் 18ல் குண்டம் திருவிழா துவக்கம்
மாசாணியம்மன் கோவிலில் 18ல் குண்டம் திருவிழா துவக்கம்
ADDED : ஜன 06, 2026 08:43 AM
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா வரும், 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா தை அமாவாசையான, வரும், 18ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும், 31ம் தேதி இரவு, 12:30 மணிக்கு மயான பூஜையும், வரும், பிப்., 1ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் சக்தி கும்பஸ்தானம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.2ம் தேதி காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் குண்டம் கட்டுதல்; மாலை, 6:30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது.
வரும், பிப்., 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி காலை, கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், இரவு மகா முனி பூஜை, 5ம் தேதி காலை, மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.
வரும், 18ம் தேதி முதல் வரும், பிப்., 5ம் தேதி வரை மாலை, 6:30 மணிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் செந்தில்குமார், உதவி ஆணையர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

