/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் ஏப்.8ல் குண்டம்
/
சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் ஏப்.8ல் குண்டம்
ADDED : மார் 27, 2025 11:25 PM
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குருரிஷி மலையடிவாரத்தில் சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில், 52ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா ஏப்., 8ம் தேதி நடக்கிறது.
கோவை வடக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் ராவுத்துக்கொல்லனுார் மலை அடிவாரத்தில் சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் வரும் 31ம் தேதி காலை, 8.00 மணிக்கு கணபதி ஹோமம், மாலை,6.00 மணிக்கு பூச்சியூர் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கம்பம் புறப்பாடு, இரவு, 7.00 மணிக்கு பூச்சாட்டு, சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 7ம் தேதி திங்கட்கிழமை இரவு, 7.00 மணிக்கு சஞ்சீவி வன தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி அழைத்தல் இரவு, 9.00 மணிக்கு குண்டம் திறப்பது, அக்கினி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் நடக்கிறது.
ஏப்., 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, 5.00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், அதை தொடர்ந்து பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 7.00 மணிக்கு பூவோடு எடுத்தல் தொடர்ந்து,10.00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

