ADDED : மார் 29, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, போத்தனூர் போலீசார் கடந்த பிப். 28ல் வெள்ளலூர், மகாலிங்கபுரம், கக்கன் நகரை சேர்ந்த லோகேஸ்வரன் 29 என்பவரை, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக, கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய, தெற்கு சரக துணை கமிஷனர் பரிந்துரையில் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
அதுபோல், கோவை, செட்டிபாளையம், ஓராட்டு குப்பையில் வசிக்கும், மிதுன்ராஜ், 27, உடுமலை, எஸ்.வி.புரத்தை சேர்ந்த ஜெகனாதன், 26, கோவை, காளப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த கோகுல், 28 ஆகியோர் கடந்த பிப்.,27ல் மெத்தாம் பெட்டமைன் எனும் போதை பொருள் விற்க சென்றபோது, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் பிடிபட்டனர்.
சிறையிலடைக்கப்பட்ட மூவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.