/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரை கொலை செய்த நால்வர் மீது 'குண்டாஸ்'
/
வாலிபரை கொலை செய்த நால்வர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஆக 05, 2025 11:54 PM
கோவை; திருப்பூர், தானூர் புதூரை சேர்ந்தவர் ஹேமந்த், 25; கோவையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மா தம் 5ம் தேதி, ஹேமந்த், சரவணம்பட்டியில் உள்ள ஹோட் டலுக்கு சென்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த நால்வர், ஹேமந்த்துடன் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹேமந்த் உயிரிழந்தார்.
சரவணம்பட்டி போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரவீன், 28, சரவணம்பட்டியை சேர்ந்த ஹரி பிரசாத், 26, சந்திரகுமார், 27, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் ஆகிய நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். சிறையில் உள்ளவர்களிடம், இதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.