ADDED : ஜூலை 15, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கடந்த மாதம், 28ம் தேதி கோவை புலியகுளம் அம்மன்குளம் ஏரிமேடு பகுதியில், மூதாட்டி அணிந்திருந்த ஆறு பவுன் நகைகளை, மர்மநபர் ஒருவர் திருடினார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 48 என்பவரை சிறையில் அடைத்தனர்.
இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சிறையில் உள்ள மணிகண்டனிடம் இதுகுறித்த உத்தரவு வழங்கப்பட்டது.