/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் மீது 'குண்டாஸ்'
/
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 16, 2025 09:13 PM
கோவை; பீளமேடு பகுதியில் கல்லுாரி மாணவர்கள் உட்பட பலருக்கு, கஞ்சா விற்பனை செய்த இருவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தனர்.
கடந்த மே 18ம் தேதி பீளமேடு, கொடிசியா அருகில் இருவர் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தண்ணீர் பந்தலை சேர்ந்த ஜெயராஜ், 25 மற்றும் கொடிசியா, ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சபரிவாசன், 19 ஆகிய இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்து வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் துணை கமிஷனர் பரிந்துரை செய்தனர்.
பரிந்துரையை ஏற்றுக்கொண்ட, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.