/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டத்து காளியம்மன் கோவிலில் 16ல் பூமிதி விழா
/
குண்டத்து காளியம்மன் கோவிலில் 16ல் பூமிதி விழா
ADDED : பிப் 10, 2025 10:46 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பழைய சர்க்கார்பதியில், குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பழங்குடியின மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில், உற்சவ விழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
வரும், 13ல், மாலை, 4:00 மணிக்கு விநாயகர் பொங்கல் பூஜை, 14ல், இரவு, 9:30 மணிக்கு கங்கையில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு வருதல், 15ல், காலை 6:30 மணிக்கு குண்டம் திறப்பு, காலை, 8:30 மணிக்கு தேர்நிலையில் இருந்து விநாயகர் கோவில் முன் தேர் நிறுத்துதல், பொன்னாலம்மன் மலைக் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு, 7:30 மணிக்கு பூவோடு எடுத்து, அம்மன் தேர் குண்டம் வந்தடைதல், இரவு, பூ வளர்த்தல் நடக்கிறது.
இதேபோல, 16ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாணம், காலை, 7:30 மணிக்கு கங்கையில் இருந்து சக்தி கும்பம் கொண்டு வருதல், காலை, 8:30 மணிக்கு பூ இறங்குதல், அதன்பின், தேரோட்டம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், அன்னதானம் நடக்கிறது. வரும், 18ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு தேர் கோவிலை வந்தடைதல், மாலை, 6:00 மணிக்கும் கம்பம் இறக்குதல் மற்றும் அபிேஷக பூஜை நடக்கிறது.

