/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்திய இருவர் மீது குண்டாஸ்
/
ரேஷன் அரிசி கடத்திய இருவர் மீது குண்டாஸ்
ADDED : ஏப் 21, 2025 09:43 PM
பொள்ளாச்சி; ரம்ஜான் நோம்பு கஞ்சி தயாரிப்பதற்காக, மானிய விலையில் வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திய இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், கடந்த மாதம், 17ம் தேதி, கோவை அடுத்த மதுக்கரை ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, லாரி ஒன்றில், சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பரோஸ்கான், 35, பாலக்காடு புதுசேரி அய்யப்பக்குமார் ஆகியோர், 15,200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதைக் கண்டறிந்து தடுத்தனர்.
விசாரணையில், அரசால் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் நோம்பு கஞ்சி தயாரிக்க, மானிய விலையில் வழங்கப்பட்ட, 15,200 கிலோ ரேஷன் அரிசி என்பதும் தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனம் மற்றும் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முரளிதரன், குண்டர் சட்டத்தில் இவர்களை கைது செய்ய, கோவை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பவன்குமார், ரேஷன் அரிசி கடத்திய, பரோஸ்கான், அய்யப்பக்குமார் ஆகியேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே, கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ளவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.