தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விமான பயணியிடம் சிக்கிய தோட்டாக்களால் பரபரப்பு

விமான பயணியிடம் சிக்கிய தோட்டாக்களால் பரபரப்பு

விமான பயணியிடம் சிக்கிய தோட்டாக்களால் பரபரப்பு


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை விமான நிலையம் வந்த பயணி ஒருவரின் பையில், துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடை சேர்ந்த, 72 வயது முதியவர், புனே செல்ல நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த பையில், இரு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. போலீசார் விசாரணையில், அவரது உறவினர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதும், பாதுகாப்புக்காக அவர் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளதும் தெரிந்தது.

அந்த துப்பாக்கியின் தோட்டாக்கள், தவறுதலாக பயணியின் பையில் இருந்ததும், மொத்தம் ஆறு தோட்டாக்களில் மீதமுள்ள, நான்கு தோட்டாக்கள் உறவினரின் வீட்டில் இருப்பதும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us