UPDATED : நவ 28, 2026 08:30 PM
ADDED : நவ 28, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
கோவை: நொய்யலில் களப்பணியுடன் கார்த்திகை தீபம் ஏற்ற, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
‘குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 471வது வார தொடர் களப்பணி மாலை 3.00 முதல் 6.00 மணிக்கு வரை பேரூர் படித்துறையில் நடக்க உள்ளது. கார்த்திகை தீப நன்நாளில் சிறப்புமிக்க நம் பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி, தீப ஒளியேற்றி நிலவொளியில் நொய்யலை வணங்கும் நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்கலாம்’ என அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியுள்ளார்.
