நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; அழுக்குசாமியார் கோவிலில், குருபூஜை விழா நாளை நடக்கிறது.
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுாரில் பிரசித்தி பெற்ற அழுக்குச்சாமியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், 105வது குருபூஜை திருவிழா நாளை (15ம் தேதி) நடக்கிறது.
விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு கொடிக்கம்பம் நடுதல், காலை, 7:00 மணிக்கு கஞ்சி பூஜை, காலை, 8:00 மணிக்கு மஹா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 5:10 மணிக்கு சுவாமிகளின் திருமேனி திருவீதி உலா, மங்கள இசை, நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு மறு பூஜை நடக்கிறது.
இவ்விழாவில், வேட்டைக்காரன்புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள், பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.