/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமை பண்பை வளர்க்கும் குருபூஜை
/
தலைமை பண்பை வளர்க்கும் குருபூஜை
ADDED : ஜன 15, 2024 11:04 PM
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் ஜன., மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
விழாவின் அனைத்து பணிகளையும், உயர்வு, தாழ்வு பார்க்காமல், வித்யாலயத்தின் தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறு குழந்தை முதல், கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் வரை பங்கிட்டு கொண்டு செய்கின்றனர்.
ஆசிரியர்களும், பக்குவத்துடன் இவர்களுக்கு பணிகளை பிரித்து வழங்கி, மேலாண்மை செய்து, அவர்களும் இணைந்து பணியாற்றுவார். தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய விழாக்களில், ஒன்றாக இந்த குருபூஜை விழாவும் கருதப்படுகிறது.
விழாவில், இறைபக்தி, அன்பு, அருள், நல்லொழுக்கம், நேர மேலாண்மை, உழைப்புக்கு மதிப்பு, கடமை உணர்வு, தலைமை பண்புகள், கலை உணர்வு, அழகு உணர்வு, ஆன்மா பயிற்சி, கூட்டுறவு வேலைகளில் ஏற்றத்தாழ்வு பாராமல் செய்தல் போன்ற நற்பண்புகளை குருபூஜை விழா மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.