/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் குருபூர்ணிமா பெற்றோருக்கு பாத பூஜை
/
பள்ளியில் குருபூர்ணிமா பெற்றோருக்கு பாத பூஜை
ADDED : ஜூலை 11, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், குருபூர்ணிமா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் குருபூர்ணிமாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மாணவர்களின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர். இந்த சிறப்பு பூஜை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெற்றோருக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர். பெற்றோர் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் அளித்தனர். பள்ளி மாணவர்கள் குரு சார்ந்த வழிபாட்டு பாடல்களை பாடினர். பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.