/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேடபட்டி அருகே குட்கா விற்றவர் கைது
/
வேடபட்டி அருகே குட்கா விற்றவர் கைது
ADDED : ஆக 20, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேடபட்டி, அய்யாவு நகரில் உள்ள மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடை உரிமையாளர் வீரமலை,63 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த, 200 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.