/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீத மானியத்தில் ஜிப்சம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
100 சதவீத மானியத்தில் ஜிப்சம் விவசாயிகளுக்கு அழைப்பு
100 சதவீத மானியத்தில் ஜிப்சம் விவசாயிகளுக்கு அழைப்பு
100 சதவீத மானியத்தில் ஜிப்சம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 10, 2025 02:09 AM
கோவை : கோவை மாவட்டத்தில், ஜிப்சம் உரத்தை 100 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம் என, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், பிரச்னைக்குரிய மண் வகைகளில், களர் நில மண்ணின் பரப்பு அதிகமாக உள்ளது. மண்ணில் கார அமில நிலை (பி.ஹெச்.,) 8.5க்கு மேல் இருந்து, மின் கடத்தும் திறன் குறைவாகவும், சோடியம் அயனி பரிமாற்றம் 15 சதவீதத்துக்கு மேல் இருப்பின் அது களர் மண் எனப்படுகிறது.
களர் மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பயிர் உற்பத்திக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
களர் மண்ணில், சுண்ணாம்புத் தன்மை இல்லாத நிலையில், ஜிப்சம் இடும்போது, களர் தன்மையை குறைவது, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிப்சம் இடும்போது, மண்ணின் இயற்பியல், வேதியியல் பண்புகளை மேம்படுத்துகிறது.
நமது மாவட்டத்தில், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், 1,262 ஏக்கர் களர் தன்மை உடைய நிலத்தை மறுசீரமைக்கும் வகையில், 631 டன் ஜிப்சம், ஏக்கருக்கு 500 கிலோ என்ற அளவில் வினியோகிக்கப்படுகிறது.
களர் மண் கொண்ட விவசாயிகள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், மண் வள அட்டையின் அடிப்படையில், முழு மானியத்தில் ஜிப்சம் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.