ADDED : ஏப் 17, 2025 11:41 PM
கோவை; ஹேக்கத்தான் போட்டியில் வெல்பவர்களுக்கு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகை காத்திருக்கிறது.
கோவையில் பருவநிலை தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம், சுத்தமான ஆற்றல் ஆகிய துறைகளில், புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், 'ஈக்கோ ஸ்பார்க் சேலஞ்ச்' என்ற, தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க (ஸ்டார்ட் அப் டி.என்.,) கோவை மண்டல மையம், தமிழக காலநிலை மாற்றத் திட்டம் ஆகியவை இணைந்து, அட்டல் இனோவேஷன் மிஷனின் கீழ் இயங்கும் 'ஏ.ஐ.சி., ரைஸ்' தொழில்முனைவு வளர்ப்பு மையம் உடன் இணைந்து நடத்தப்படுகிறது.
கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சுழற்சி பொருளாதாரம், நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, காற்றுத் தரம் மற்றும் நகர மாசுபாடு கட்டுப்பாடு, நிலையான ஆற்றல் தீர்வுகள், காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண்மை, ஈரக் கழிவு மேலாண்மை, நிலையான வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில், சிறந்த தீர்வுகளை ஏற்படுத்தும் யோசனையை, https://form.startuptn.in/ecospark என்ற முகவரியில், வரும் 30க்கும் தேதிக்குள் பதிவிடலாம். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகை காத்திருக்கிறது.
மாணவர்களும், ஸ்டார்ட் அப்களும் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
