/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கைகளால் வரையும் ஓவியமே சிறப்பு; நெருங்க முடியாது 'டிஜிட்டல்' ஓவியங்கள்'
/
'கைகளால் வரையும் ஓவியமே சிறப்பு; நெருங்க முடியாது 'டிஜிட்டல்' ஓவியங்கள்'
'கைகளால் வரையும் ஓவியமே சிறப்பு; நெருங்க முடியாது 'டிஜிட்டல்' ஓவியங்கள்'
'கைகளால் வரையும் ஓவியமே சிறப்பு; நெருங்க முடியாது 'டிஜிட்டல்' ஓவியங்கள்'
ADDED : ஜூன் 01, 2025 01:31 AM

கோவை பீளமேட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலையரங்கத்தில், கோவையை சேர்ந்த ஓவியர்கள் துரை, மோகன்ராஜ் ஆகியோர் வரைந்த, 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு விருந்து படைக்கின்றன.
கண்காட்சி குறித்து ஓவியர் துரை கூறுகையில், ''கோவை ரத்தினபுரிதான் எனக்கு சொந்த ஊர். கர்நாடகா, ஆந்திரா, ஐதராபாத் என, பல மாநிலங்களுக்கு சென்று கண்காட்சி நடத்தி வருகிறேன்.
ஓவியங்களுக்கு வாட்டர் கலர், அக்ரலிக், ஆயில் பெயின்ட் பயன்படுத்துகிறேன். இயற்கை காட்சிகளையும், ரவிவர்மா பாணியிலான ஓவியங்களையும் வரைய பிடிக்கும். தமிழக ரசிகர்கள் பெரும்பாலும், யதார்த்த பாணி மற்றும் இயற்கை சார்ந்த ஓவியங்களைதான், அதிகம் விரும்பி ரசிக்கின்றனர்,'' என்றார்.
'ஏஐ., தொழில்நுட்ப ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் கிராபிக் ஓவியங்கள் வரவால், கையால் வரையும் ஓவியங்களுக்கு பாதிப்பு வருமா? என்றதற்கு, ''எத்தனை நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், ஓவியர்கள், துாரிகையால் வரையும் ஓவியங்களுக்கு மதிப்பு குறையாது. கிராபிக்ஸ் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வரும் ஓவியங்கள், கண் பார்வையோடு நின்று விடும். கையால் வரையும் ஓவியங்கள் தான், ரசிகர்களின் கண்களை கடந்து மனதை தொடும்,'' என்றார்.
இந்த ஓவியக் கண்காட்சி, இன்றோடு நிறைவு பெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.