/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் தொட்டியில் கைவண்ணம் சுற்றுச்சூழலுக்கு வரும் புது வண்ணம்
/
தேங்காய் தொட்டியில் கைவண்ணம் சுற்றுச்சூழலுக்கு வரும் புது வண்ணம்
தேங்காய் தொட்டியில் கைவண்ணம் சுற்றுச்சூழலுக்கு வரும் புது வண்ணம்
தேங்காய் தொட்டியில் கைவண்ணம் சுற்றுச்சூழலுக்கு வரும் புது வண்ணம்
ADDED : டிச 01, 2024 01:19 AM

ஆதிகாலத்தில் இருந்த பல பழக்கங்கள், இடையிடையே அப்படியே மாறிப்போயின. உடைகளில் துவங்கி இப்போது உணவு வரை வந்து நிற்கிறது. இதுபோன்ற பொருட்களை சுமக்க, பழைய காலத்தில் பயன்படுத்திய மஞ்சப்பையை, இப்போது பயன்படுத்துங்கள் என்று அரசாங்கம் சொன்னாலும், செவி கொடுப்பவர்கள் சிலர் தான்.
அதனால், மறுபடியும் அதிகரித்திருக்கிறது பிளாஸ்டிக் புழக்கம். இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில், வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் மாற்றம் கொண்டு வந்து சிறு விதைகளை ஆங்காங்கே துாவி விடுகின்றனர் பலர். நேற்று, கோவையில் நடந்த ஓவிய சந்தையிலும், தேங்காய் தொட்டிகளில் பல உபயோகமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
தண்ணீர் மற்றும் கஞ்சி அருந்த பயன்படுத்தப்படும் குவளை, தேநீர் குவளைகள், சோப்பு வைக்கவும், மலர் செடிகள் வைக்கவும் ஏதுவான சிறிய தொட்டிகள், சுவாமி சிலைகள் உட்பட, இயற்கைக்கு தொந்தரவு செய்யாத பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இது, பார்வையாளர்கள் பலரின் கவனம் ஈர்த்தது.
இதுகுறித்து, ஸ்டால் அமைத்திருந்த கோவையை சேர்ந்த சுஜித் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு முடிந்த அளவு கைகொடுக்கவும், தேங்காய் தொட்டியில் பல பொருட்கள் உருவாக்க முடியும். இது, அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்றது. தொடரும் இதுபோன்ற பொருட்களின் பயன்பாட்டால், பிளாஸ்டிக் உபயோகம் பெருமளவு குறையும். அழிந்து போன கலைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.

