/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹேண்ட்பால் வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
ஹேண்ட்பால் வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஏப் 21, 2025 06:12 AM

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழக ஹேண்ட்பால் மூத்தோர் அணிக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு நடந்தது.
தமிழக ஹேண்ட்பால் அசோசியேசன் சார்பில், தென் மண்டல மூத்தோர் அணிக்கான சாம்பியன்ஷிப் ஹேண்ட்பால் போட்டிகள், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஆரஞ்சு அகாடமி வளாகத்தில் மே மாதம், 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இப்போட்டியில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கோவா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டிக்கான, தமிழக அணியின் மூத்தோர் பிரிவு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமில் வீரர் மற்றும் வீராங்கனைகள் தலா, 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மே மாதம் 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், பயிற்சி முகாம் நடக்கிறது.