/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைவினை பொருட்கள் களைகட்டும் கண்காட்சி
/
கைவினை பொருட்கள் களைகட்டும் கண்காட்சி
ADDED : செப் 19, 2024 11:01 PM

கோவை : கோவை சுகுணா கல்யாணமண்டபத்தில், கைவினை பொருள் கவுன்சில் சார்பில், 'சிருஷ்டி-2024' கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது; நாளை நிறைவுபெறுகிறது.
கைவினைஞர்கள், கலைஞர்களின் மேம்பாட்டிற்காக தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில், 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், இக்கண்காட்சி தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதில், ஆடைகள், அலங்கார பொருட்கள், நகைகள், பொம்மைகள் என கைவினைஞர்களும், கலைஞர்களும், நெசவாளர்களும் உருவாக்கிய, 68 வகையான பொருட்களின் அரங்குகள், ஆறு உணவு அரங்குகள் இடம் பெற்றுள்ளன. காலை, 10:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இக்கண்காட்சியில் பிளாஸ்டிக் தவிர்க்கும் வகையில், பார்வையாளர்கள் துணிப்பைகளை எடுத்து வர, கண்காட்சி நிர்வாக குழு அறிவுறுத்தியுள்ளது.