/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீழே கிடந்த ரூ.50 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
/
கீழே கிடந்த ரூ.50 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 16, 2024 12:18 AM

கோவை : பாலசுந்தரம் ரோடு அருகில் ஒருவர் தவறவிட்ட பணத்தை, உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை சித்தாபுதுார் பாலாஜி நகரை சேர்ந்தவர் நிர்மலா, 41; இவர் செப்., 22ம் தேதி தனது தாயார் சாரதாவுடன் பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது சாலையில், 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு கிடந்ததை பார்த்தார்.
பணத்தை தேடி யாராவது வருகிறார்களா என, நிர்மலா சிறிது நேரம் பார்த்தார். யாரும் வராததால், பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார்.
அர்ஜூன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தார். அவர், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். பணத்தை தவறவிட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், செபாஸ்டியன் என்பவர் பணம் தவறவிட்டதற்கான சான்று காண்பித்தார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவை வரவழைத்து, அவர் முன்னிலையில் செபாஸ்டியனிடம் ஒப்படைத்தார்.