/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி
ADDED : ஆக 07, 2025 10:43 PM

கோவை; 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
கோவை சரகத்திலுள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கைத்தறி தினத்தன்று அனைவரும் கைத்தறி துணிகளை அணிந்து கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதுடன் கைத்தறி ஆடைகளின் விற்பனையை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்த அரசு அறிவுறுத்தியுள்ளது. நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதியோர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு மாதந்தோறும் தலா 1,200 ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி உத்தரவு,சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மூன்று நெசவாளர்களுக்கு 2.24 லட்சம் மதிப்பீட்டில் திட்டத்தொகை பெற அனுமதி உத்தரவு, சேமிப்பு மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 7 நெசவாளர்களுக்கு தறி உபகாரணங்கள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பவன்குமார் வழங்கினார்.
மேலும், சிறுமுகை தேவாங்க சமுதாய கூடத்தில், கைத்தறித் துறையின் சார்பில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், 10 நெசவாளர்களுக்கு தலா 50.000 ரூபாய்- வீதம் 5 லட்சத்துக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது.
முதியோர் ஓய்வூதியத் திட் டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் , கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், 50 பயனாளிகளுக்கு தறி உபகரணங் கள் என மொத்தம், 65 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங் கப்பட்டது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி துறை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.