/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் ஒப்படைப்பு
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் ஒப்படைப்பு
ADDED : ஏப் 03, 2025 11:44 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு, 'சாந்தி பீட்ஸ்' நிறுவனம் சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில், நேற்று 'சாந்தி பீட்ஸ்' நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரிண்டர், பிரிட்ஜ், சேர் மற்றும் டேபிள், பீரோ போன்றவை வழங்கப்பட்டது.
இந்த உபகரணங்களை, 'சாந்தி பீட்ஸ்' இயக்குனர் சரவணன் மற்றும் நிறுவன மேலாளர் குணசேகரன் ஆகியோர் ஒப்படைத்தனர்.
நிகழ்சியில், கோவை மாவட்ட இணை இயக்குனர், (மருத்துவம் மற்றும் ஊரக பணிகள்) சுமதி, மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அன்வர்அலி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் பங்கேற்றனர். உபகரணங்கள் வழங்கிய நிறுவனத்திற்கு டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர்.

