sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம்!

/

 கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம்!

 கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம்!

 கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம்!


ADDED : நவ 26, 2025 07:12 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இந்திய அரசியலமைப்பு, கடந்த 1949, நவ., 26 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நாள் இந்திய அரசியலமைப்பு தினமாக 2015 முதல் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

* அரசியலமைப்பை உருவாக்க இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. அரசியலமைப்பின் இறுதி வடிவம், 395 சரத்துகள், 8 அட்டவணை கொண்டது.

* இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

* அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

* இந்திய அரசியலமைப்பு சாசனம், கையால் எழுதப்பட்ட ஆவணம். உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.

* கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணத்தின் பிரதி, 'ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்டு, பாராளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அசல் கையெழுத்து ஆவணத்தில், 283 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

* இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, இதுவரை ஒரே ஒரு முறை திருத்தப்பட்டுள்ளது. அதாவது, அவசர பிரகடனம் செய்யப்பட்ட போது, 1976 டிச., 18 அன்று மட்டுமே திருத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us