/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளை விரட்டுகிறது தொங்கு சோலார் மின் வேலி விவசாயிகள் வரவேற்பு; வனத்துறை கண்டிப்பு
/
யானைகளை விரட்டுகிறது தொங்கு சோலார் மின் வேலி விவசாயிகள் வரவேற்பு; வனத்துறை கண்டிப்பு
யானைகளை விரட்டுகிறது தொங்கு சோலார் மின் வேலி விவசாயிகள் வரவேற்பு; வனத்துறை கண்டிப்பு
யானைகளை விரட்டுகிறது தொங்கு சோலார் மின் வேலி விவசாயிகள் வரவேற்பு; வனத்துறை கண்டிப்பு
ADDED : ஜன 29, 2024 11:10 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொங்கு சோலார் மின்வேலிகளை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யானைகள் இதனை பார்த்து பயப்படுவதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், ஓடந்துறை, ஆதிமாதையனுார் உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொந்தரவு அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் அதனை மிகவும் சுலபமாக மிதித்தும், மரக்கிளைகளை தூக்கி வீசியும் சேதப்படுத்தி விளை நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
தற்போது இதுபோன்ற சோலார் மின் வேலிகளில் தொங்கு சோலார் மின் வேலிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலரும் தற்போது தொங்கு வேலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் யானைகள் தொந்தரவு குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தேக்கம்பட்டி விவசாயிகள் கூறியதாவது :
சோலார் மின் வேலிகளை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். தொங்கு சோலார் மின் வேலிகள் தற்போது பயன் அளிக்கிறது. யானைகள் இதனை பார்த்து பயப்படுகின்றன. தற்போது வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் சோலார் மின்வெளிகளை பயன்படுத்த அனுமதி வேண்டும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். வனத்துறையினர் வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுத்தால் நன்றாக இருக்கும். அது முடியாததால் தான் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்கின்றனர். வனத்துறையினர் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''வனப்பகுதியையொட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வரை சோலார் மின்வேலிகள் அமைக்க வனத்துறையினர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தொங்கும் சோலார் மின்வேலிகள் பயன் அளிக்கின்றன. ஆனால் இயற்கை முறையில் யானைகளை விரட்ட பல வகைகள் உள்ளன. தேனி வளர்ப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது,'' என்றனர்.----