ADDED : பிப் 15, 2024 07:08 AM
அ நிறம் | அளவு
போத்தனுார் : சுந்தராபுரம் பஸ் ஸ்டாப் அருகே, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் வணிக வளாகம் முன் நேற்று மாலை, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்படும் என, இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மாநில தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புஷ்பாஞ்சலி செலுத்த வந்த ராஜேந்திரன் உள்பட, 17 பேரை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.
