/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் பிரச்னைக்கு தீர்வால் மகிழ்ச்சி
/
மின் பிரச்னைக்கு தீர்வால் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 24, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள வி.என்.டி., நகர், மாதா அமிர்தானந்தமயி நகர் குடியிருப்பு பகுதியில், நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்த பிரச்னையால் சீரற்ற மின் வினியோகம் இருந்தது. இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குளாகி வந்தனர்.
இந்நிலையில், எஸ்.எம்.வி., குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மின்வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, 63 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மின்வாரிய செயற்பொறியாளரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.