தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கறிவேப்பிலை விவசாயிகள் தொடர்ந்து விலை உயர்வதால் மகிழ்ச்சி!

கறிவேப்பிலை விவசாயிகள் தொடர்ந்து விலை உயர்வதால் மகிழ்ச்சி!

கறிவேப்பிலை விவசாயிகள் தொடர்ந்து விலை உயர்வதால் மகிழ்ச்சி!


UPDATED : செப் 21, 2026 11:36 PM

ADDED : செப் 21, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:36 PM ADDED : செப் 21, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: சேலம் மாவட்டம் ஆத்தூரிலும், ஆந்திராவிலும் வறட்சி நிலவுவதாலும், பருவமழை பெய்யாததாலும், அங்கு கறிவேப்பிலை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், காரமடை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள செங்காம்பு கறிவேப்பிலைக்கு நல்ல விலை கிடைப்பதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுமுகை, காரமடை, மத்தம்பாளையம் பகுதிகளில், 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் செங்காம்பு கறிவேப்பிலை சாகுபடி நடக்கிறது. இந்த இலை நல்ல மனமும், சுவையும் இருப்பதால், மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கறிவேப்பிலை அறுவடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

காரமடை பகுதி விவசாயிகள், 100 ஆண்டுகளுக்கு மேலாக செங்காம்பு ரக கறிவேப்பிலையை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு விளையும் கறிவேப்பிலை அதிகளவில் கேரள மாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் விளையும் கறிவேப்பிலை, கோவை மற்றும் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், காரமடை கறிவேப்பிலைக்கு விலை குறைந்தது.

கடந்த ஆண்டு நல்ல மழை காரணமாக, மகசூல் அதிகம் கிடைத்தது. ஒரு கிலோ, 15 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு பருவ மழை இல்லாததால், விளைச்சல் குறைந்துள்ளது. ஆந்திரா, சேலம் ஆத்தூர் ஆகிய இரண்டு இடங்களிலும் வறட்சி நிலவுகிறது. அங்கிருந்து வரும் கறிவேப்பிலை கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அங்கிருந்து வரத்து சற்று குறைந்துள்ளது.

காரமடை செங்காம்பு கறிவேப்பிலை கூடுதல் சுவை மணத்துடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்குகின்றனர். தற்போது தோட்டத்தில் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விலை போகிறது. இது நல்ல வருவாய்.

காரமடை பகுதியில் இருந்து தினமும் 50 டன் கறிவேப்பிலை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. முதல் தரமான கறிவேப்பிலை தினமும் 10 டன் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் காரமடை கறிவேப்பிலைக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், பனிக்காலம் துவங்க இருப்பதாலும் இதர பகுதிகளில் வரத்து மேலும் குறைந்து, விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us