/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி
/
மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி
மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி
மிலாது விழாவில் நல்லிணக்கம் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி
ADDED : செப் 05, 2025 10:15 PM

கோவை:
இறைதுாதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை, மிலாது நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். மிலாது நபி நாளான நேற்று, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
கோவை கோட்டைமேட்டில் நடந்த ஊர்வலத்தில், சமூக ஒற்றுமையை காப்போம்; சகோதரத்துவத்தை போற்றுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர், சிறுமியர் ஏந்திச் சென்றனர். அவர்களுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பிஸ்கட், குளிர்பானங்கள் இனிப்பு வழங்கி, மத நல்லிணக்கத்தை போற்றினர்.
உக்கடம் மவுலான முஹம்மது அலி மார்க்கெட் வளாகத்தில் நடந்த, 82ம் ஆண்டு மிலாது விழாவில் திருமண நிதி, தையல் இயந்திரம், மருத்துவ நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, விழாவில் பங்கேற்ற நலிந்தோருக்கு, கோயமுத்துார் டவுன் ஹாஜி அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி வழங்கினார். மார்க்கெட் தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். 86வது வார்டு கவுன்சிலர் அஹமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.