ADDED : ஜூலை 20, 2025 01:38 AM
திருத்தேர் உற்சவத் திருவிழா
அன்னுார், குப்பனுார், கருப்பராயன் கலாமணி சுவாமி திருக்கோவிலில், திருத்தேர் உற்சவத் திருவிழா நடக்கிறது. கருப்பராயன், கருப்பழகிக்கு 1008 மலர் அர்ச்சனை, திருக்கல்யாண உற்சவம், சுவாமி அழைத்தல், அன்னதானம் காலை, 7:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. மாலை, 3:00 மணி முதல், நேர்த்திக்கடன் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், காலை, 9:30 மணி முதல், மகா திரிபுரஸூந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர பூஜையும், காலை, 11:00 மணிக்கு, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம்பிரசாத், ரவிகுமார் ஆகியோரின் வாய்ப்பாட்டு கச்சேரியும் நடக்கிறது.
கோவை புத்தகத் திருவிழா
மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் கொடிசியா இணைந்து, கோவை புத்தகத் திருவிழாவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்துகின்றன. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கலாம்.
வாழ்வில் நகைச்சுவை
கோவை நகைச்சுவை சங்கம், டேனி ஷெல்டர்ஸ் மற்றும் பரிபூர்ணாவின் ஐஸ்வர்யம் குடியிருப்பு சார்பில், 'வாழ்வில் நகைச்சுவை' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரியில் மாலை, 5:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், சின்னத்திரை புகழ் மதுரை முத்து சிறப்புரையாற்றுகிறார்.
நுால் வெளியீட்டு விழா
ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கருத்தரங்க அரங்கத்தில் நுால் வெளியீட்டு விழா காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மு.ஆனந்தனின் சிறார் நாவல், 'தாராவும் பறக்கும் செல்போனும்' வெளியிடப்படுகிறது.
குருபூஜை விழா
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில், ஸ்ரீ குருபூஜை விழா இன்று அன்னுாரில் நடக்கிறது. அன்னுார், கஸ்துாரி ஹாலில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில் பல்வேறு விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர்.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
கீதை உபதேசம்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின்வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில், மாலை, 5:00 மணிக்கு உபதேசம் துவங்குகிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அன்னுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974 -75ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர். அன்னுார் அரசு பள்ளி அருகில், அன்னுார் ஐ.டி.ஐ., வளாகத்தில், காலை, 10:00 மணி முதல் பொன்விழா மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது.
நுால் வெளியீட்டு விழா
தீர்த்தபயண அபிஷேக வழிபாடு மற்றும் 'நால்வர்' நுால் வெளியீடு நிகழ்ச்சி, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2,விக்னேஷ் மஹாலில் நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் நிகழ்வில், பேரூராதீன சாந்தலிங்க மருதாசல அடிகளார் நுாலை வெளியீடுகிறார்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
இலவச கண் பரிசோதனை
சத்யன் கண் மருத்துவமனை மற்றும் கோவை கிளாக்கோமா பவுண்டேசன் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு, ஜி18 பொதுநல அறக்கட்டளையில், காலை, 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
கோவை பேரூரடிகளார் மருத்துவமனையின் சார்பில், சாந்தலிங்க அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. காரமடை, ஓம்சக்தி கோவில் அருகில், கண்ணார்பாளையம் சமுதாயக்கூடத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.