/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவைகளுக்கு கட்டினார் கூடு மாராத்தாளுக்கும் கிடைத்தது வீடு!
/
பறவைகளுக்கு கட்டினார் கூடு மாராத்தாளுக்கும் கிடைத்தது வீடு!
பறவைகளுக்கு கட்டினார் கூடு மாராத்தாளுக்கும் கிடைத்தது வீடு!
பறவைகளுக்கு கட்டினார் கூடு மாராத்தாளுக்கும் கிடைத்தது வீடு!
ADDED : ஏப் 19, 2025 11:43 PM

அதிகாலையில், குருவிகளின் கீச்... கீச்... சத்தம், அன்றைய நாளுக்கான பூபாளம்.
பறவைகள் கூடு கட்டி குடியிருக்க, உதவிய மரங்களில் பல இன்று இல்லை. நகரின் வளர்ச்சி என்ற பெயரில், மரங்களும் காடுகளும் அழிக்கப்படுவதால், குருவிகள் கூடு கட்ட இடமின்றி தவிக்கின்றன.
பறவைகளின் கவலையை அறிந்ததாலோ என்னவோ, 15 ஆண்டுகளாக செயற்கை கூடு கட்டிக் கொடுத்து வருவாய் ஈட்டி வருகிறார், மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூர் மாதேஸ்வரன் மலை சாலையில் வசிக்கும் மாராத்தாள், 62.
இவர் வீட்டில் இருந்தபடியே குருவிகளுக்கு கூடுகள் செய்து, சிறு அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் தயாரிக்கும் கூடுகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
மாராத்தாளிடம் பேசினோம்...
''மில் வேலைக்கு சென்று வந்தேன். உடல் நலம் பாதித்ததால், வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. இரு பெண் குழந்தைகள். அப்போது எனது தம்பி செய்து வந்த குருவிக்கூடு வித்தையை கற்றுக் கொண்டேன். முதலில், கூடுகள் அமைக்க திணறல் இருந்தது. போக, போக பழகிக் கொண்டேன்.
கடந்த 15 ஆண்டுகளாக, சிட்டுக்குருவி, துாக்கணாங்குருவி, காதல் பறவைகளுக்கு, பல்வேறு மாடல்களில் கூடுகள் செய்து விற்று வருகிறேன்.
இதன் வாயிலாக, ஒரு நாளுக்கு, 500ல் இருந்து 750 ரூபாய் வரை வீட்டில் இருந்தே வருவாய் ஈட்ட முடிகிறது. இப்படி சேமித்த தொகையுடன், மத்திய அரசின் பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தில், இரண்டு லட்சம் ரூபாய் உதவி பெற்று வீடு கட்டி வசிக்கிறேன்,'' என்கிறார் மாராத்தாள்.

