ADDED : பிப் 16, 2026 06:00 AM
- நமது நிருபர் -:
தற்போது, வெயில் துவங்கினாலும், இரவு 11:00 மணி துவங்கி, அதிகாலை வரையும், மேகமூட்டம் காரணமாக சில நாட்கள் காலை, 9:00 மணி வரையும் பனியின் தாக்கம் உள்ளது.
மதியம் வெயில் அதிகமாக இருந்தாலும், குளிர்ந்த சீதோஷ்ணம் மறுபுறம் தொடர்கிறது.
குளிர்காலத்தில் ஏற்படும் சுவாசப்பாதை தொற்று மற்றும் இன்புளூயன்ஸா தொற்று இன்னுமும் சில இடங்களில் பரவி வருகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இதன் தாக்கம் இருக்கும்.
லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை; அதே நேரம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு மேற்கண்ட பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேலும் தொடர்ந்தால், தொடர் சிரமங்கள் இருந்தால், மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, சிரமத்தை தொடர்ந்து உணர்பவர்கள் உடனே பரிசோதனை செய்து, தக்க தடுப்பு மருந்து, சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
